• ஜெலாப்பாங் சட்டமன்ற‌ உறுப்பினர் சியா பாவ்‌ ஹியான் தீபாவளி வாழ்த்து

      ஈப்போ,அக்.24-
      தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெலாப்பாங் சட்டமன்ற‌ உறுப்பினர்
      சியா பாவ்‌ ஹியான்
      இந்துக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

      இந்த தீபாவளி அனைவருக்கும் குறிப்பாக இந்துக்களுக்கு நன்மையை கொண்டு வரட்டும். தீபாவளி பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
      அனைத்து‌ இந்துக்களுக்கும்‌
      இனிய‌ தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று
      ஜெலாப்பாங் சட்டமன்ற‌ உறுப்பினர்
      சியா பாவ்‌ ஹியான் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    • தீபாவளி‌ பண்டிகையை அன்பை‌ பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் ஓங் பூன் பியோவ் தீபாவளி வாழ்த்து

      ஈப்போ,அக்.24-
      இந்துக்களின் முதன்மை பண்டிகையாக திகழும் தீபத்திருநாளில் மக்கள் அனைவரும் அன்பை பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று பெர்ச்சாம் சட்டமன்ற‌ உறுப்பினர் ஓங் பூன் பியோவ் கூறினார்.

      மலேசியர்கள் தீபாவளி பண்டிகையை ஒற்றுமை உணர்வுடன் கொண்டாட வேண்டும். மலேசியர்களாகிய நாம் அனைவரும் வழக்கமாகவே திறந்த இல்ல விருந்துபசரிப்புகளை நடத்தி தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள் என்பதால் இந்த தீபாவளியை பண்டிகையை நாம் மலேசியர்களாக கொண்டாடி ஒற்றுமையை வலுப்படுத்துவோம் என்று கேட்டுக் கொண்ட பெர்ச்சாம் சட்டமன்ற‌ உறுப்பினர் ஓங் பூன் பியோவ். இந்துக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

    • பத்து காஜா நகரத்தை அலங்கரித்த துரோனோ சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிவன்‌ தியூ

      ஈப்போ,அக்.24-
      தீபாவளி என்றாலே அலங்காரம்தான் முதலிடம் வகிக்கிறது. அரசு துறைகள், தனியார் தங்களின் நேர்த்தியான பாரம்பரிய அலங்காரங்களை செய்து முத்திரை பதித்து வருகின்றன.

      அந்த வகையில்
      தீபாவளி‌ பண்டிகையை‌ முன்னிட்டு‌
      பத்து‌‌காஜா‌‌ நகரத்தை அலங்கரிக்கும்‌ பணி‌ மேற்கொள்ளப்படுவதாக துரோனோ சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிவன் தியூ கூறினார்.

      இந்துக்களின் முதன்மை பண்டிகையான தீபாவளி முக்கியமான பண்டிகையாகும். அந்த வகையில் பத்துகாஜா நகரத்தை அலங்கரிக்பும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் தீபாவளியை முன்னிட்டு பத்துகாஜா நகரம் அலங்கரிப்பில் மின்னும் என்று துரோனோ சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிவன்‌ தியூ நம்பிக்கை தெரிவித்தார்.

    Malaysia News

    Back to top button
    × How can I help you?
    Enable Notifications OK No thanks